பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்துடன் நிந்தவூரில் இடம்பெறும் பொதுக்கூட்டம் -புகைப்படங்கள்

தொற்றா நோய்க்கான முதலாவது ஆயுர்வேத
ஆராய்ச்சி நிலைய வைத்தியசாலை இன்று நிந்தவூரில் திறந்து வைக்கப்பட்ட பின்னர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
பொதுக்கூட்டம் நிந்தவூர் அரசயடி தோட்டத்தில்
இன்று (28) மாலை ஆரம்பமானது.

பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் பங்குபற்றுதலுடன்
நடைபெற்ற இக்கூட்டத்துக்கு சுகாதார போசணை மற்றும் சுதேச
மருத்துவத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசீம் தலைமையேற்றிருந்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்
நகரதிட்டமிடல், நீர்வழங்கள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இம்மாபெரும் பொதுக் கூட்டத்தின்போது
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும்
வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன் எதிர்காலத்தில் ஆயுர்வேத மூலிகை
தோட்டங்களை கிழக்கு மாகாணத்தில்
உருவாக்கும் திட்டத்தின் கீழ், அதன் முதற்கட்டமாக
வைத்தியசாலை மற்றும் பாடசாலைகளுக்கு
மூலிகை மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இன்றைய பொதுக் கூட்டத்தில் கெளரவ அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வரலாற்று முக்கியத்துமிக்க ஆக்ரோஷமான உரையொன்றினை ஆற்றி கூட்டத்தில் கலந்து கொண்டோரை மெய்சிலிர்க்க வைத்தார்.


கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், மாகாணசபை
உறுப்பினர்களான அப்துல் றஸாக் (ஜவாத்) ஆரிப் சம்சுதீன், ஏ.எல். தவம்,
சிப்லி பாருக், கட்சியின்
மூத்த துணைத் தலைவர் முழக்கம் அப்துல் மஜீட்,
அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், கட்சியின்
உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் பெருந்திரளான பொதுமக்க்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -