இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பஸ் மீது தாக்குதல்

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பஸ் மீது இன்றிரவு (15) 8.20 மணியளவில் எழுதுமட்டுவாள் பகுதியில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை டிப்போவிற்கு சொந்தமான WP NB-8599 எனும் இலக்கமுடைய பஸ் பிற்பகல் 4.00மணியளவில் திருமலை,புல்மோட்டை,முல்லைதீவு ஊடாக யாழ்ப்பாணத்திற்கு செல்லும் வழியிலேயே இவ்வணர்த்தம் இடம் பெற்றுள்ளது.

பஸ்ஸின் முன் கண்ணாடி சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகள் மற்றுமொரு பஸ்ஸில் அனுப்பி வைக்கப்ட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

திருகோணமலை டிப்போவிற்கு சொந்தமான பஸ்கள் மீது 03 தடவைகளுக்கு மேலாக தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளதாகவும் டிப்போ உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

கல்வீச்சு தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -