செம்மண்ணோடை மாற்றுத்திறனாளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல்

ல்குடா தொகுதியில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள செம்மண்ணோடை கிராமசேவகர் பிரிவில் அன்றாடம் சொல்ல முடியா துயரங்களை தங்கள்; எதிர்நோக்கிவரும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளி ஏற்றும் நோக்கில் செயற்பட்டுவரும் ஒளிமயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் உறுப்பினர்களுடன் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (14.01.) செம்மண்ணோடை கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் நடைபெற்றது.

கிராம அபிவிருத்திச்சங்கம் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந் நிகழ்வில் செம்மண்ணோடை கிராமத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்தி எதிர் காலத்தில் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -