உயர் தர பரீட்சையில் சாதனை படைத்த ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவி அறூஸாவுக்கு

ன்று வெளியாகிய GCE உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஓட்டமாவடி எஸ்.எம்.டி ஹாஜியார் வீதியில் வசிக்கும் சாதாரன குடும்பத்தைச்சேர்;ந்த இல்யால் பாத்திமா அறூஸா எனும் மாணவி தொழிநுற்ப பிரிவு பரீட்சையில் தோற்றி மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் 3ம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் தரம் 1 தொடக்கம் GCE O/L வரை மட் பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலத்தில் கல்வி கற்று 2006ம் ஆண்டு 5ம் ஆண்டு புலமைப்பரீட்சையிலும் தோற்றி 150 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்றுள்ளார்.

GCE உயர்தரம் கற்பதற்காக 2014ம் ஆண்டு மட் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இணைந்து கொண்ட இவர் தொழிநுற்ப பாடத்தினைத் தெரிவு செய்து இன்று வெளியாகிய பெறுபேற்றின் படி 3A 1C என கூடுதலான புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் 3ம்இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதனை அறிந்த அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வி இன்று காலை அம்மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று அம் மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு புதிய LAPTOP (மடி கணிணி) ஒன்றையும் வழங்கி வைத்து அம் மாணவிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இதன் போது அல்-கிம்மா நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் எச்.எம். ஜாபிர்அவர்களும் கலந்து கொண்டார்.

அன்பளிப்பினை பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் மாணவி அறூஸா எமக்கு கருத்து தெரிவிக்கையில்:

'முதற்கன் எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ். எனது பெறுபேற்றை அறிந்து எனக்கு LAPTOP ஒன்றை அன்பளிப்பு செய்த அல்-கிம்மா நிறுவனத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு பெறுமதியான இவ் அன்பளிப்பானது இன்னும் எனது கல்வி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் எனவும் அம்மாணவி குறிப்பிட்டார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -