வணக்க வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது - அமைச்சர் ஹக்கீம்

அஸ்லம் எஸ்.மௌலானா-
தொல்பொருளியல் திணைக்களத்தினால் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பொத்தானை பிரதேசத்திலுள்ள ஆராய்ச்சி மரைக்கார் தைக்கா பள்ளிவாசலில் இடம்பெறுகின்ற வணக்க, வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்படுவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

பொத்துவில் தொகுதியிலுள்ள திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பொத்தானை ஆராய்ச்சி மரைக்கார் தைக்காவுக்கு சனிக்கிழமை நேரடியாக விஜயம் செய்து, அதன் நிர்வாகத்தினர் மற்றும் பிரமுகர்களுடன் கலந்துரையாடி, நிலைமைகளை ஆராய்ந்த பின்னர் ஊடககங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

"பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இந்த தைக்காவில் நடைபெறுகின்ற இஸ்லாமிய மார்க்க நிகழ்வுகளில் வெளியூர்களில் இருந்து கூட முஸ்லிம்கள் வந்து கலந்து கொண்ட வரலாறுகள் உள்ளன. இவ்வாறானதொரு தைக்காவுக்கு தொல்பொருளியல் திணைக்களம் உரிமை கோரி, அதனை பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்து, எவரும் உட்பிரவேசிக்கக்கூடாது அறிவித்திருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

தொல்பொருளியல் திணைக்களத்தின் இந்த செயற்பாடு இப்பகுதி மக்களிடையே ஒரு அச்ச நிலையை தோற்றுவித்திருக்கிறது. எவ்வாறாயினும் இங்கு இடம்பெற்று வருகின்ற வணக்க, வழிபாடுகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

இது முஸ்லிம்களின் பூர்வீக இடம் என்பதற்கான ஆதாரங்களை ஒன்றுதிரட்டி, தொல்பொருளியல் திணைக்களத்திடம் சமர்ப்பித்து சட்டரீதியில் இதற்கு தீர்வு காண்பதற்கு முயற்சிப்போம். இவ்விடயம் தொடர்பில் தொல்பொருளியல் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு தெளிவுபடுத்துவைத்தவுள்ளோம். 

அதேவேளை பொத்தானை பிரதேசத்திலுள்ள வயல் காணிகளில் பயிர்ச்செய்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நிவர்த்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வனபரிபால திணைக்கள அதிகாரிகள் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர். இதன்போது நாங்களும் வந்து, இப்பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு முடிந்தளவு முயற்சிப்போம்" என்று குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -