நேற்று வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி தொழிநுட்பப் பிரிவில் 1ஆம், 2ஆம் இடங்களை இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரி மாணவர்கள் பெற்றுள்ளனர்.
இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் முஹம்மது இஸ்மாயில் பாத்திமா மிஸ்னா மாவட்டத்தில் முதலாமிடத்தையும் தேசிய மட்டத்தில் 24ஆவது இடத்தையும் பெற்று தமது பாடசாலைக்கு புகழீட்டுக் கொடுத்துள்ளார். மேலும் பொலிஸ் உத்தியோகத்தர் முகம்மது இஸ்மாயில் - மற்றும் சரிபுத்தீன் ஜெஸ்மி ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியுமாவார்.
அம்பாறை மாவட்டத்தில் 2ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்ட இதே பாடசாலையைச் சேர்ந்த சாஜஹான் பாத்திமா ஹனா தேசிய மட்டத்தில் 51ஆவது இடத்தையும் பெற்றுள்ள இவர் இறக்காமம் ஹாஜியார் வீதியைச் சேர்ந்த சாஜஹான் - பக்கீர் முஹைதீன் லாபிறா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியுமாவார்.
உயர் தரப் பரீட்சையில் கலை தொழிநுட்பப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டதன் பின்பு இப்பாடசாலை மாணவர்கள் இப்பிரிவில் முதன்முதலில் 2016 உயர்தரப் பரீட்சையில் தோற்றியிருந்தமையும் குறிப்பித்தக்கது. சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.சௌத்துல் நஜீம் இம்மாணவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துக் கொண்டார்.
இறக்காமம் செய்தியாளர் - எஸ்.எம். சன்சீர்.
இறக்காமம் செய்தியாளர் - எஸ்.எம். சன்சீர்.
