முதலமைச்சரின் 85 இலட்ச நிதி ஒதுக்கீட்டில் மத்திய முகாம் அபிவிருத்தி..!

கிழக்கு மாகாணசபையின் கிராமங்களை அபிவிருத்தி செய்வோம் என்னும் திட்டத்துக்கமைய 2016ஆம் ஆண்டின் நிதி இதுக்கீட்டில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கல்முனை ஜவாத் ரஷாக், சம்மாந்துறை ஐ.எல்.எம்.மாஹீர் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதின் 85இலட்ச ரூபா ஒதுக்கீட்டில் செய்து முடிக்கப்பட்ட வேலைகள் நேற்று மாலை பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹீரின் அழைப்பில் மத்தியமுகாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அமைப்பாளர் நஷார் ஹாஜியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதல்மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய மக்கள் பிரதிநிதிகளான சம்மாந்துறைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினஎர் எம்.ஐ.மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், மாகாண சபை உறுப்பினர் கல்முனை ஜவாத் ரஷாக் ஆகியோருடன் ஸ்ரீ.மு.காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது நான்கு கொங்கிரீட் வீதிகளும், மத்தியமுகாமுக்கான பல்தேவை கட்டிடமும் மக்களிடம் கையளிக்கப்பட்டதுடன், சவளக்கடை பிரதேசத்தில் இயங்கும் தாருல் ஹிக்மா மத்ரசாவின் பிரச்சினைகள் தொடர்பில் முதலமைச்சர் கேட்டறிந்ததுடன் தனது சொந்தநிதியில் இருந்து முக்கிய தேவைக்காக ஒரு தொகை பணத்தினையும் கையளித்தார். அத்துடன் சென்றல் கேம்ப் ஜி.எம்.எம்.எஸ் வித்தியாலய புதிய வகுப்பறைக் கட்டிடத்தையும் திறந்து வைத்ததுடன் புதிதாக மத்தியமுகாம் அஸ்-சிராஜ் மகாவித்தியாலயத்தில் புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லும் நடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மத்திய முகாம் பிரதான வீதியில் பிரச்சாரப் பொதுக்கூட்டமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -