6500 ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு 80 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த நபர்..!

6500 ரூபாவுக்கு சாப்பிட்ட ஒருவர் 80 ஆயிரம் ரூபாய் (இந்திய ரூபாய்) டிப்ஸ் வழங்கிய சம்பவம் ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

பிரித்தானியாவின், அயர்லாந்தில் இந்தியர் ஒருவருக்கு சொந்தமான உணவகம் ஒன்று உள்ளது. குறித்த உணவகத்திற்கு 2002ஆம் ஆண்டு முதல் தொழில் அதிபர் ஒருவர் வந்து சாப்பிட்டு போவது வழக்கம்.

குறித்த உணவகத்தில் பாபு என்ற சமயல் கலைஞர் சமைக்கும் உணவுகளை சுவைத்து சாப்பிடும் அவர், சாப்பிட்டு முடித்த பின்னர் பாபுவை அழைத்து பாராட்டி விட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், அண்மையில், குறித்த நபர் தனது குடும்பத்தாருடன் அந்த உணவகத்திற்கு சென்று சாப்பிட்டுள்ளார். அவர் சாப்பிட்டதற்கான தொகை 6500 ரூபாய் (79.5 பவுண்ட்) செலுத்தினார்.

அதன் பின்னர் வழமைப்போல் பாபுவை அழைத்து பாராட்டிய அவர், யாரும் எதிர்பாராத விதமாக 80 ஆயிரம் ரூபாய் டிப்ஸ் (1000 பவுண்ஸ்) வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த தொழில் அதிபர், சுவையான உணவுகளை வழங்கிய பாபுவுக்கு நன்றி. இது வெறும் சிறியத் தொகையே என கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -