கிழக்கு முதலமைச்சரின் மீலாதுன் நபித் தின செய்தி

லகுக்கு அமைதியையும் சமாதானத்தையுமே இஸ்லாம் போதிக்கின்றது என்பதை இஸ்லாத்தின வரலாற்றினையும் முஹம்மத் நபி ( ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றினையும் படித்தவர்கள் அறிந்து கொள்ள முடியும்,

இஸ்லாம் ஒரு போது தீவிரவாதத்தையோ வன்முறையை ஆதரிக்கவில்லை என்பதையும் ஒரு பிரச்சினையை எவ்வாறு பொறுமையுடனும் பேச்சுவார்த்தை மூலமும் தீர்க்க வேண்டும் என்பதை நபியவர்களின் அழகிய வழிகாட்டல்களும் செயற்பாடுகளும் எமக்கு உணர்த்தி நிற்கின்றன,

உலகில் எந்த மதத்தை எந்த சிந்தனையை பின்பற்றுவராக இருந்தாலும் நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசிப்பதன் ஊடாக பல அரசியல் மற்றும் சமூக ரீதியான பிரச்சினைகளில் எவ்வாறானதொரு தீர்வை பெற்றுக் கொள்வது என்பதை எமக்கு உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பதையும் இஸ்லாமிய சன்மார்க்கத்தை பற்றிய உண்மையைும் அறிந்து கொள்ளலாம்.

ஏழை எளியவர்களுக்கு தான தர்மங்கள் செய்வது,சிறுவர்கள் மீது அன்புகாட்டுவது மற்றும் பெரியோரை மதிக்கும் நபியவர்களின் அழகிய நற்பண்புகள் நம் வாழ்வில் என்றும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

இஸ்லாத்தின் ஐம்பெருங்கடமைகளும் சமூகத்தின் உன்னதத்துக்கான பல்வேறு உண்மைகளை சுமந்து இருக்கின்றன.

உதாரணத்துக்கு ஸகாத் கடமை முறையாக நிறைவேற்றப்படுவதன் ஊடாக பாகுபாடுகள் மற்றும் வறுமையை போக்குவதற்கான பிரதான செயற்பாடாக அமைகின்றது

இதேவேளை இஸ்லாத்தின் மீதும் முஸ்லிங்களை இலக்கு வைத்தும் முன்னெடுக்கப்படுகின்ற சதித்திட்டங்களை முஸ்லிங்கள் ஒற்றுமையாக ஒரே அணியாக நின்று எதிர்கொள்வதன் மூலமே வெற்றிகொள்ள முடியும் என்பதை முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் போதனைகள் ஊடாக எமக்கு சொல்லித்த்தரப்பட்டுள்ளது,

எம்மிடையே கருத்து வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகள் இருந்தாலும் சமூக ரீதியான பிரச்சினைகளின் போது அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து முகங் கொடுப்போம்.

நபியவர்களின் உன்னத வாழ்வின் நெறிகளை உணர்ந்து அவற்றை வாழ்வில் கடைப்பிடிப்பதன் ஊடாக இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவோமாக .

கிழக்கு மாகாண முதலமைச்சர்
ஹாபிஸ் நசீர் அஹமட்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -