ஒலுவில்- மீனவர்களுக்கு கைகொடுக்கும் பிரதி அமைச்சர் ஹரீஸ்



அகமட் எஸ். முகைடீன், ஹாசீப் யாசீன்-
லுவில் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகளை 'பெக்கோ'கனரக இயந்திரத்தின் மூலம் கடலுக்குள் செலுத்துவதற்கான நடவடிக்கையினைஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறைபிரிதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் சொந்தநிதியொதுக்கீட்டில் இன்று (3) சனிக்கிழமை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்நௌபர் ஏ. பாவா, அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு மீனவர்கூட்டுறவுச் சங்க தலைவர் எம்.எஸ்.ஏ.நசீர் உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள்,மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஒலுவில் துறைமுக படகுப்பாதையில் மண் நிரம்பி காணப்படுவதனால்துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகள் கடலுக்குள் செல்லமுடியாத நிலை காணப்படுகிறது. இதனால் ஆயிரக் கணக்கான மீனவர்களின்மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. 

மீனவர்களின் குறித்த பிரச்சினைக்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறுவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றத்தில் வேண்டுகோள்விடுத்திருந்தார். அத்தோடு எழுத்து மூலமான கோரிக்கையினையும்துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூண ரணதுங்கவிடம்கையளித்திருந்தார். அச்சந்தர்ப்பத்தில் இதற்கான கனரக இயந்திரத்தினை வழங்கிமண்ணை அகற்றித் தருவதாக அமைச்சர் வாக்குறுதி வழங்கியிருந்தார். 

இருந்தபோதிலும் ஹம்பாந்தோட்டை பிரதேசத்திலுள்ள மண் அகழ்வும் கனரகஇயந்திரத்தை ஒலுவில் துறைமுகத்திற்கு கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடரச்சியாக பாதிப்புறுவதனைகருத்திற்கொண்டு பிரதி அமைச்சர் ஹரீஸ் ஒலுவில் துறைமுகத்தில் சிக்கியுள்ளமீன்பிடிப் படகுகளை 'பெக்கோ' கனரக இயந்திரத்தின் மூலம் கடலுக்குள்செலுத்துவதற்கு தனது சொந்த நிதியினை ஒதுக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். 

இதற்கு முன்னரும் ஏற்பட்ட குறித்த பிரச்சினைக்கு பிரதி அமைச்சர் தனது சொந்தநிதியிலிருந்து 'பெக்கோ' கனரக இயந்திரத்தின் மூலம் மண்ணை அகற்றிமீன்பிடிப் படகுகளை கடலுக்குள் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -