திருகோணமலை மாவட்ட செயலகத்தில் முஸ்லிம் அதிகாரிகள் யாரும் இல்லை -ஹக்கீமுக்கு கடிதம்

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஏதாவது ஒரு பொறுப்பு வாய்ந்த பதவிக்கு முஸ்லிம் அதிகாரி ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கிண்ணியா கிழக்கு வள அபிவிருத்தி மையம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹகீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 43 வீதம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எனினும் மாவட்ட செயலகத்தின் எந்த ஒரு பொறுப்பு வாய்ந்த பதவியிலும் முஸ்லிம்கள் இல்லை. இதனால் முஸ்லிம்கள் சம்பந்தப் பட்ட சில விடயங்களில் இங்கு திருத்தியற்ற நிலை காணப் படுகின்றது.

எனவே, இதனை நிவர்த்திக்கும் பொருட்டு மாவட்ட செயலகத்தின் ஏதாவது ஒரு பொறுப்பு வாய்ந்த பதவிக்கு முஸ்லிம் அதிகாரி ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு இக்கோரிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -