காத்தான்குடி உலமா சபைக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு..!

ஹைதர் அலி-
ற்போது நாட்டிலே ஏற்பட்டிருக்கும் இன ரீதியான அசாதாரண நிலையின்போது முஸ்லிம்கள் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக இருந்து தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து காத்தான்குடி ஜம்மியத்துல் உலாமா சபைக்கு 75,000 ரூபா பெறுமதியான தளபாடங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு 2016.12.01ஆந்திகதி காத்தான்குடி ஜம்மியத்துல் உலமா சபை மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார், அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்...

எமது மாகாணத்தை பொறுத்தவரை தொடர்ச்சியாக நாங்கள் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டு வந்தோம். இருப்பினும் நாங்கள் பொறுமையாக இருந்து எங்களின் துஆக்கள் மூலமாகவே அனைத்து சோதனைகளிலும் வெற்றிபெற்றோம். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள இனவாத சூழலிலும் அத்தகைய நிதானமானதொரு போக்கு அவசியமாகும்.

ஆகவே இத்தகைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் எமது ஜம்மியத்துல் உலமா சபை எமக்கு வழிகாட்ட வேண்டிய தேவை உள்ளது. மேலும் எம்மை போன்ற அரசியல் வாதிகள் விடுகின்ற தவறுகளையும் மிம்பர் மேடைகளில் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை ஜம்மியத்துல் உலமாவிற்கு உள்ளது. அவ்வாறு எமது தவறுகளை அவ்வப்போது சுட்டிக்காட்டுவதனூடாகவே அவைகளை சரி செய்துகொள்ள முடியும் என தெரிவித்தார்.

மேலும் எமது ஜம்மியத்துல் உலமா சபையானது தனது செயற்பாடுகளுக்கான நிதி செலவீனங்களை எவ்வாறு ஈடுசெய்கின்றார்கள் என்ற ஒரு கேள்வி எனக்குள் இருந்தது வந்தது. அதற்கமைவாக இன்ஷாஅல்லாஹ் ஒவ்வொரு வருடமும் எனது சொந்த நிதியிலிருந்து 20,000 ரூபாவினை ஜம்மியத்துல் உலமாவின் செலவுகளுக்கென வழங்கவிருக்கின்றேன். 

மேலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நசீர் அஹமட் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அடுத்த ஆண்டுக்கான மாகாண சபை நிதியிலிருந்து ஒரு தொகை நிதியினை உலமா சபைக்கு ஒதுக்கி தருவதாக வாக்குறுதியளித்துள்ளார். மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்ஸின் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான கௌரவ றஊப் ஹகீம் அவர்கள் அன்மையில் கட்டார் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டபோது அங்குள்ள ஜாமியுள் பலாஹ் பழைய மாணவர்கள் அமைச்சரிடம் விடுத்த கோரிக்கமைவாக தான் அடுத்தமுறை காத்தான்குடிக்கு விஜயம் செய்யும் போது ஜாமியுள் பலாஹ் மத்தரசாவிற்கு 10 கணனிகளை பெற்றுத்தருவதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஒவ்வொரு சந்தர்பத்திலும் இவ்வூரின் நலனில் அதிக அக்கறையுடன் பாடுபடும் ஜம்மியத்துல் உலமா சபைக்கு எதிர்வரும் காலங்களிலும் எம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளவுள்ளோம் என தெரிவித்தார். மேலும், இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் மர்சுக் அஹமட் லெப்பை அவர்களும் கலந்துகொண்டார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -