அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை பொலிஸ் பிரிவு மற்றும் துறைமுக பொலிஸ் பிரிவுகளிலும் இரு சடலங்கள் இன்று (18) காலை கரையோரங்களில் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புல்மோட்டை பொலிஸ் பிரிவில் அரிசிமலைப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணுறுப்பு வெட்டப்பட்டவாறு சடலம் கரையொதுங்கியுள்ளது.
இதேவேளை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கடற்கரையில் கருப்பு கலிசன் சிவப்பு டிசேட் அணிந்தவாறு சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.
இவரின் கலிசன் பக்கட்டில் அடையாள அட்டை பிரதியொன்று காணப்படுவதாகவும் இதில் வாழைச்சேனை-விபுலானந்தர் வீதி வேலாயுதம் ஜெயசங்கர் (45வயது) என காணப்படுவதாகவும் தெரியவருகின்றது.
குறித்த சடலம் தொடர்பில் புல்மோட்டை மற்றும் துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
