வட, கிழக்கு இளைஞர்களை விளையாட்டுத்துறையில் ஊக்குவிக்க நடவடிக்கை - பிரதி அமைச்சர் ஹரீஸ்.

அகமட் எஸ்.முகைடீன், ஹாசீப் யாசீன்-
மூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்த உதவுவதாக சுட்டிக்காட்டிய விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் இளைஞர்களை விளையாட்டுத் துறையில் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி முதல் முன்னெடுக்கப்படும் எனவும் திட்டவட்டமாக அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் விளையாட்டுத்துறை அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

விளையாட்டுத்துறையானது தற்போது உலகளாவிய ரீதியில் ஒரு கலாசாரமாகவே மாறி விட்டது. சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்த உதவுகின்றன என்பதை தற்போது அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

விளையாட்டுத்துறையை ஊக்குவித்து அதனை எதிர்காலத்தில் மேலும் சக்திமிக்க ஒன்றாக மாற்றியமைக்க வேண்டிய தேவையும் பொறுப்பும் எமக்குள்ளது. இதற்கான வேலைத்திட்டங்களையும் நாம் செயற்படுத்தவுள்ளோம்.

சார்க் விளையாட்டுப் போட்டியில் எமது நாடு பல பதக்கங்களை வென்றது, பார ஒலிம்பிக்கிலும் எமது நாடு சார்பாக பதக்கங்கள் வெல்லப்பட்டன. இதனை மேலும் ஊக்குவிப்பதற்கான செயற்பாட்டை நாம் பாடசாலை ரீதியாக மேற்கொள்ளவுள்ளோம். அந்தவகையில் அனைத்து மாணவர்களும் தமக்கு விருப்பமான விளையாட்டை தெரிவு செய்யும் செயற்றிட்டத்தையும் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் கழகங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தையும் நாம் வெகுவிரைவில் செயற்படுத்தவுள்ளோம்.

அத்தோடு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு வாழ் இளைஞர்களை விளையாட்டுத்துறையில் அதிகமாக இணைத்துக் கொள்வதற்கான செயற்பாடும் அடுத்தாண்டு ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்மூலம் அம்மாகணங்களில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என்பதுமே எமது நோக்கமாகும்.

இந்த சபையில் பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ், ஸ்ரீ நேசன், துரைரெட்ணசிங்கம் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்வரும் காலத்தில் நாம் வடக்கு, கிழக்கில் உள்ள மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளோம். 

கடந்த காலத்தில் நாம் வடக்கு, கிழக்கை இன பேதமின்றி எமது அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளோம், குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், அம்பாறை போன்ற மாவட்டங்களிலும் ஏனைய பகுதிகளுக்கும் மைதான அமைப்புக்காக, புனரமைப்புக்காக பல மில்லியன் நிதிகளை வழங்கியுள்ளோம் என்றார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -