அண்மைக்காலமாக அக்கரைப்பற்றில் சமுக சேவை திணைக்களத்தின் கட்டிடம் அமையவுள்ள கட்டிடத்தின் பணியினை தடுத்து அதாஉல்லாஹ் அணியினர் நீதிமன்றில் இடைக்கால தடை பெற்றார்கள் என்பது தொடர்பில் சில விடயங்களை இறுதியாக பதிவு செய்கிறேன்.
சமுக சேவை திணைக்களம் வருவதையோ, கட்டிடம் அமைப்பதையோ நாம் எதிர்க்கவில்லை அல்லது அதாஉல்லாஹ் என்கின்ற தனிமனிதன்தான் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்கின்ற வாதங்களும் எம்மிடமில்லை. மாறாக அந்த இடத்தில் கட்டுவது தொடர்பில்தான் பிரச்சனை இருக்கிறது.
நீதிமன்ற தீர்ப்பை சரிபடுத்திக் கொண்டு மீண்டும் அபிவிருத்தியாளர்கள் கட்டிடம் அமைத்தாலும் வரலாற்றில் மாநகர சபை உருப்பினர்களால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு மாற்றமான கட்டிடம் ஒன்றிற்காக அவர்கள் நீதிமன்றம் சென்றனர் என்பதையும் என்ன தேவையின் பொருத்தம் வைக்கப்பட்ட காணி இது? என்ன நடந்திருக்கிறது? என்பது எமது சந்ததியினருக்கு தெரியவரும்.
சிலர் அபிவிருத்தியை தடுத்தார் என்கின்ற வாதமும் அதாஉல்லாஹ்தான் செய்ய வேண்டுமா..? வேறு எவரும் செய்யக் கூடாதா..? என்கின்ற நிலைப்பாட்டுடனும் இன்னும் சிலர் அதாஉல்லாஹ் காலத்து அபிவிருத்தியை குறை கூறியும் அதே காலத்தில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் ஒருவர் அதாஉல்லாஹ்வின் கட்சியை சேர்ந்தவருடைய சில விடயங்களை சிலாகித்தும் பேசுவதைக் காணக்கிடக்கிறது.
கெளரவ மாகாண சபை உறுப்பினர் வீதிகளுக்கல்லாம் கல் வைக்கின்றார். மைதானத்துக்கும் கல் வைக்கின்றார். முறாஓடையில் கல் வைக்கின்றார் கட்டுகிறார். ஏன்..? அதே போல் மாகாண சபை உள்ளூராட்சி அமைச்சரின் நன்பராகிய சகோ.அன்வர்டீன் அவர்களும் வீதிகளுக்கு கல் வைக்கின்றார்.. இவை எல்லாம் அதாஉல்லாஹ்வால் தடுக்கப்பட்டதா...?
இங்கு நாம் சமுக சேவை திணைக்களத்தின் கட்டிடம் தொடர்பில் முரண்படுவது ஏற்கனவே அக்கரைப்பற்றில் திட்டமிடப்பட்டு அபிவிருத்தி மேற்கொள்ளப்டட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியான திட்டமிடலுடன் அனைத்தும் இடம் பெற வேண்டும் என்பதினாலாகும். ஏற்கனவே எம்மால் மாநகர சபை உறுப்பினர்களால் இந்த இடம் இதற்காகத்தான் ஒதுக்கப்பட்டதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டிருக்கிறது
அதற்கு மாற்றமாக அதிகார தோரணையில் அதாஉல்லாஹ் மீது கொண்ட காழ்புணர்ச்சி காரணமாக அவ்விடத்தில் தான் விரும்புகின்ற கட்டிடம்தான் அமைய வேண்டும் அது அக்கரைப்பற்று மாநாகரத்தை கொலனியாக சித்தரித்தாலும் பரவாயில்லை என்கின்ற நிலைப்பாட்டுக்கு நாம் எதிரானவர்கள். முக்கியத்துவமான நீர்வழங்கல் காரியாலத்தை பிரிக்க துடியாய் துடிக்கின்றவர்கள் இந்த கட்டிடத்தை தங்களுக்கு தாருங்கள் என வேண்டாமல் நிற்பது ஏன்? அதன் முக்கியதுவததை அறிந்ததாலா?
வைத்தியசாலை அமைக்கின்ற போது பாருங்கள் மைதானத்தை சீரழிக்கான் என்றார்கள். பாதை அமைப்பு தாமதமான போது இவர் என்னயாம் போரவனுகளை போட விடுகிறார் இல்லை என்றார்கள். மாநகர சபை பிரதேச சபை என பிரித்த போது இது தேவையா..? என்றார்கள்.
வீதி அபிருத்தி அதிகார சபை நீர்வழங்கல் பிராந்திய காரியாலயம் அமைத்த போதும் ஏனைய நிறுவனங்கள் வந்த போதும் என்னதுக்காம் என்றார்கள். இப்போது வாய்மேல் விரல் வைத்து அவரின் அபிவிருத்தியை பார்த்து வியந்து நிற்கவில்லையா?
இன்று சந்தையை குறை காணும் நீங்கள் பஸ் நிலையத்தை பற்றி விமர்சிக்கின்ற நீங்கள் முறாவோடை நீர்ப்பூங்கா நீர்வழங்கல் நீர் பூங்கா என்பன குறித்து அறிக்கை விடும் நீங்கள் அதாஉல்லாஹ்வின் திட்டமிடலையும் அவர் இந்த ஊரின் மீது வைத்திருக்கும் பற்றையும் உணராமலே போய் விடுவீர்கள்.
அது போலதான் நூதனசாலை அதனோடினைந்த மைதான நுழைவு மைதான அபிவிருத்தி என்பன தொடர்பிலும் அதிகம் சிரத்தை எடுக்கின்றீர்கள். இந்த அபிவிருத்திக்கான ஒழுங்கை யார் செய்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்,
ஏற்கனவே மாகாண சபை உறுப்பினர் உதுமா லெப்பையின் ஆலோசனை யான ஒரு குழுவை அமைத்து அதற்கான இடத்தையும் தெரிவு செய்து மக்களின் விருப்பத்திற்கும் அக்கரைபற்றுக்கும் பங்கம் ஏற்படாத வகையில் செயற்படுங்கள்.
குறிப்பு:
அக்கரைப்பற்றில் கடந்த பிரதேச சபை காலத்தில் இடம்பெற்ற அக்கரைப்பற்றின் பிரதான வடிச்சலுக்குரிய வாய்கால் மைதானத்தோடு செலகின்ற அதாவது மர்கஸ் பள்ளியடியில் 14 அடியும் பின்னர் மைதானத்தின் ஓரத்தில் மூன்றடி கானாகவும் மாற்றி இன்னும் நீர் வழிந்தோட முடியாமல் கொமிசனுக்காக கானமைத்த கண்ணியவான் யார்..?
மைதானத்தை வட புறத்தில் மைதானத்துக்கு சேர்ந்த காணிகளையும் எந்த குண்டர்கள் எந்த சபை இருந்த போது நில அபகரிப்பு செய்தார்கள்?
மாநகர சபையில் பாரிய சண்டையிட்டு நில அளவையாளர்களை கொண்டு வந்து அதன் பின்னால் எதிர்ப்புகளையும் மீறி நின்றவன் யார்?
இறுதியாக மாநகர சபையில் பதினான்கு மில்லியன் ரூபா மீதம் வைத்து அக்கரைப்பற்றில் ஏதும் திருத்த வேலைகளுக்காக அக்கரைப்பற்றின் மீது கரிசனை கொண்டவர்கள் யார்?
பிரதேச சபை முடிந்து மாநாகர சபை ஆரம்பித்த போது கிழக்கு மாகாண சபையில் கடன் பெற்று நடாத்த வேண்டிய சூழலை உருவாக்கிய யார்?
அதாஉல்லாஹ் என்பரின் அரசியல் வகிபாவத்தை அறிய இன்றைய தலைவர்களுக்கே நேரமடுக்கும் போது இவர்களிடம் இது தொடர்பில் பேசவிரும்பவில்லை.
