“தமிழ்மொழிக்கு முதலிடம்” கொடுத்த சிங்கள அரச உத்தியோகஸ்தர்கள்..!



ம்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 100 அரச உத்தியோகஸ்த்தர்களுக்கு 12 நாட்கள் இரண்டாம் மொழியான தமிழ்மொழி பயிற்சிநெறி ஒன்றினை தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் நடாத்தியது. அரச ஊழியர்களிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடாத்தபட்ட இந்த பாடநெறியின் (முடிவு) இருதி நாள் ஒரு தழிழ் காலாச்சார நிகழ்வாக கம்பளை பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் அன்மையில் நடைபெற்றது. 

அதன் போது அரச சிங்கள உத்தியோகஸ்த்தர்கள் தமிழ் கலாச்சரா நிகழ்வுகளை மேடையேற்றினர். இந்த நிகழ்வுகள் ஏனையோருக்கு ஒரு முன் உதாரணமாக காணப்பட்டதுடன் மிகவும் இரசிக்க கூடிய தன்மை உடயதாக காணப்பட்டது. சிங்கள உத்தியோகஸ்த்தர்கள். தமிழ் கலாச்சாரங்களான கோலம் போடுதல்¸ கும்பம் வைத்தல்¸ ஆராத்தி எடுத்தல்¸ வணக்கம் கூறுதல்¸ பரத நாட்டியம்¸ கதம்ப நடனம்¸ தாலலயம்¸ காவடி நடனம் போன்றவற்றை நிகழ்த்தி காட்டிணர். இந் நிகழ்விற்கு தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பனிப்பாளர் ஆர்.பிரசாந் ஆரியரத்தன உட்பட சமய பெரியாரகள்¸ பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் மொழி பயிற்றுவிப்பாளரகள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். 

உண்மையாகவே இவ்வாறன செயற்திட்டங்கள் பாராட்டதக்க ஒன்றாகும் இனங்களிடையே நல்லினக்கத்தை ஏற்படுத்த வேண்டியது தற்போதய நிலையில் ஒரு காலத்தின் கட்டாயமாகும். இந்த செயற்திட்டதினை தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அரச சேவை முதலாம் மொழியான சிங்கள மொழியினை தழிழ் அரச உத்தியோகஸ்தர்களுக்கும். இரணடாம் மொழியான தமிழ் மொழியினை சிங்கள அரச உத்தியோகஸ்தர்களுக்கும் பயிற்றுவித்த வருகின்மை குறிப்பிடதக்க ஒன்றாகும்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -