சசிகலாவின் குடும்பத்தைத் தேடித்தேடி ஆறுதல் கூறினார் மோடி..!

றைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது சசிகலா குடும்பத்தினரை தேடி போய் ஆறுதல் கூறினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்திலிருந்து தனி ஹெிகாப்டரில் புறப்பட்ட மோடி, அடையாறு கடற்படை தளத்தில் வந்து இறங்கியதும் ராஜாஜி அரங்கிற்கு வந்து அங்கு வைக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவிற்கு வெள்ளை மலர்கள் கொண்ட மலர் வளையம் வைத்து தொட்டு கும்பிட்டு அஞ்சலி செலுத்தினார்.

அருகில் நின்றிருந்த சசிகலா, இளவரசியைத் தேடி போன மோடி ஆறுதல் வார்த்தைகள் பேசினார். சசிகலாவின் தலையை தொட்டு ஆறுதலாக பேசினார். இளவரசி, திவாகரன், உள்ளிட்டோர்களிடமும் ஆறுதலாக பேசினார் மோடி.

அந்த நேரத்தில் அருகில் வந்த ஓ.பன்னீர் செல்வம், மோடியைப் பார்த்து குமுறி குமுறி அழுதார். ஓ.பன்னீர் செல்வத்தைப் பிடித்து ஆறுதல் சொன்னார் மோடி ஆசுவாசப்படுத்தினார். கூடியிருந்த மக்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டார் பிரதமர் மோடி.

அனைவரின் கைகளை பிடித்தும் ஆறுதல் சொன்னார். இறுகிய முகத்துடன், கலங்கிய கண்களுடன் ஜெயலலிதாவின் உடல் அருகே நின்று கொண்டிருந்தார். பின்னர் மீண்டும் ஒருமுறை கையெடுத்து கும்பிட்டு அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார் பிரதமர் மோடி. சசிகலா குடும்பத்தினரை தேடி தேடி போய் மோடி ஆறுதல் சொல்லி பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -