காரைதீவு நிருபர் சகா-
கிழக்கில் கொட்டும் மழைக்கும் மத்தியில் 2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சா.த பரீட்சை இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியது.
இலங்கையின் வரலாற்றில் அதிகூடிய 07 லட்சம் மாணவர்கள் தோற்றும் முதலாவது க.பொ.த.சா.த பரீட்சை நேற்று 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியது.
இன்றுக்காலை 8.30மணிக்கு பரீட்சை ஆரம்பமாகியது. எனினும் 8மணிக்கே மாணவர்கள் பரீட்சை மண்டபத்திற்கு வந்துவிடவேண்டுமென இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜே.புஸ்பகுமார கேட்டிருந்தார்.
பரீட்சைத்திணைக்கள வரலாற்றில் அதிகூடிய மாணவர் பங்குபற்றும் பரீட்சையாக இம்முறைப்பரீட்சை சாதனைபடைக்கின்றது.
பரீட்சை நடைமுறை விதிகளை மீறும் பரீட்சார்த்திகளும் அதேவேளை மேற்பார்வையாளர்களும் பாரபட்சமின்றி நடவடிக்கைக்குட்படுத்தப்படுவரெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடுகளிருந்தால் 1911 அல்லது 119 க்கு அறிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


