தேர்தல் கேட்பது என்றால் எமக்கு அவரின் சொத்து விபரம் தேவை - உதவி தேர்தல் ஆணையாளர்

சஜித் வெல்கம 
அப்துல்சலாம் யாசீம்-
கவலறியும் சட்டத்தை பயன்படுத்தி தனிப்பட்ட ஒருவரின் தகவலை பெற்றுக்கொண்டு அவருக்கு சேறு பூசுவதை தவிர்துக்கொள்ள வேண்டும் என திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சஜித் வெல்கம தெரிவித்தார்.

திருகோணமலை ஜெய்கப் ஹோட்டலில் இன்று (31) தேர்தல் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரசார நிதியை வரையறுத்தல் மற்றும் சொத்துக்கள் பிரகடனம் தொடர்பான் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்;

தேர்தல் பிரசார நிதி பாவனை தொடர்பாக நாம் சற்று சிந்திக்க வேண்டும்.அத்துடன் அரசியல் வாதிகள் இதைப்பற்றி எந்தளவிற்கு அறிந்திருக்கின்றார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் பிரசாரத்தின் போது அரசியல் வாதிகள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக குறைந்தது தேர்தல் அறிவித்து 90 நாட்களுக்குள் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்க வேண்டும். அத்துடன் தமது நிதிப்பாவனை தொடர்பாகவும் வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும்.அதேபோல் நாங்கள் இவைகள் தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டுவதுடன் இவைகளை தெரிந்து கொள்ளும் பொறுட்டு தான் தற்போது தகவலறியும் சட்டம் உறுவாக்கப்ட்டுள்ளது.

ஆகையால் தகவலறியும் சட்டத்தை பற்றியும் இந்த சொத்துக்கள் பொறுப்புகள் தொடர்பாகவும் நாங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஆகவே அதற்காக தேர்தல் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கான நிலையம் பொதுமக்களை அறிவூட்டுவதற்கு எடுத்துக்கொள்ளும் இவ்வாறான முயற்சிக்கு தேர்தல் ஆணையாளர் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சஜித் வெல்கம் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -