பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாண தமிழ்ச் சங்கத்தினால் கவிஞர் கு.றஜீபனின் சீத்துவக்கேடு கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று(18) காலை 10.00 மணிய ளவில் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண தமிழ்ச் சங்கத் தலைவர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் நூலின் வெளியீட்டு ரையை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, ஆய்வுரையினை கவிஞர் சோ.பத்மநாதன் ஆகியோர் நிகழ்த்தினர்.
இந் நூலினை காருண்ய அறக்கட்டளை ஸ்தாபகர் தமிழழகன் வெளியீட்டு வைக்க முதற் பிரதியினை புதிய உயர்கலைக் கல்லூரி நிர்வாகி அருள்நங்கை பெற்றுக் கொண்டார்.
இந் நிகழ்விற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை உப தலைவர் லலீசன்,பருத்தித்துறை பிரதேச செயலரும் கவிஞருமான ஜெயசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


