மூதூர் றபீக் சர்றாஜ்-
இன்று 2016.12.18 ம் திகதி பி.ப 2.00 மணியளவில் கல்முனையில் இருந்தது திருமலை நோக்கி வந்த தனியாருக்கு சொந்தமான பேரூந்து மூதூர் பயணிகளை மூதூர் நகரத்திற்கு கொண்டு வந்து இறக்கி விடாமல் 2Km தூரத்தில் 3CD சந்தியில் வைத்து இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
இப்படியான சம்பவங்கள் பல தடவைகள் இடம்பெற்றுள்ளதுடன் பயணிகள் 3CD சந்தியில் இருந்து மூதூர் நகரத்திற்கு வருவதற்கு ரூபா 100 செலுத்தி ஆட்டோவில் வருகின்றனர் ,
பேரூந்துகள் மூதூர் நகரத்திற்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டு இருந்தும் இப்படியான செயற்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுப்பார்களா?
