ஹம்பாந்தோட்டை, மாகம்புர துறைமுக வளாகத்தில் வைத்து கடற்படைத் தளபதியினால் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (13) திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் கறுப்பு பட்டயணிந்து தனது எதிர்பினை தெரிவித்தனர்.
சம்பூர் – நாவலடி பிரதான வீதி திறப்பு விழாவிற்காக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களே இவ்வாறு கறுப்பு பட்டிகளை அணிந்து எதிர்பிணை தெரிவித்துள்ளனர்.இவ்விழாவின் போது கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான கடற்படையினர் மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், மாகாண சபை அமைச்சர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தமது சகோதர ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பாக நல்லாட்சி அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஊடகவியலாளர்களுக்கு தாக்குதல் நடாத்துவதை நிறுத்த வேண்டுமெனவும் ஊடகவியலாளர்கள் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.டைலிசிலோன்
