இலங்கை எம் திரு நாடே
இனையில்லா எழில் நாடே
இனையற்று முக்கருச்சுமந்த
முத்தான என் நாடே
வாழ்துகிறேன் உன்னை
என் தாய் மண்ணே....
மூலை முடுக்கெல்லாம்
முண்டங்களாய் ஒரு காலம்
நாட்டு நடப்பெல்லாம் நாடி
நரம்பெல்லம் இன தீ கொதிக்கிறதே
சில மதவெறி அக்கினியாய் இக் காலம்
சிறு பாண்மையை தாக்கிடும் சாக்கடைக்கு
சௌக்கடி - நீ கொடுத்திடனும்
நம் முத்திலங்கை சாசணத்தில்
நான்கு இனங்களும் கை கோர்த்து
வாழ்திடனும்-என் தலைவா
நீ எமக்கு உரிமை கொடு...
எம் உரிமை பறிக்குகிறார்
உம் மினத்தில் சதி கார கும்பல் சிலர்
நாமென்ன செய்வோமய்யா
நயமாய் உரிமை கொடு
நாம் வாழ..
நாடு வளம் பெறவேனுமய்யா
மக்கள் உரிமை மதிக்கப்படனுமய்யா
யுத்தங்களற்று ரத்தக்கறை படியா
இன மொழி பேதமற்ற
பொன்னிலங்கையாய் மிளிர வேண்டுமய்யா..
உன் புன்னகை போதுமைய்யா
உள்ளங்கள் ஒன்று படனுமய்யா
இம்மண்ணில் இனியுமுண்டோ
வன்முறைகள் வேண்டாம்
குழந்தைகள் பாவமய்யா
உன் ஒரு சொல போதுமய்யா
மகிழ்திடுமே எம் எதிர் கால
தலை முறைகள்....
சாதி மத பேதமின்றி
சமத்துவமாய் வாழ்ந்திடவே
தூவுகிறேன் நான் உணர்ச்சிபூக்களாய்
என்-தாய் நாடே
எமக்கு உரிமை கொடு
மீழ் வாதார எழிலுக்கு..
நிகரற்ற என் தாய் நாடே
தரமாக திகழ்கிறதாம்
அழகிய இலங்கையென ஐய்னாவும்
அழகாக சொல்லுகிறதே
அடக்குகிறான் இம்மண்ணின்
மகிமை தனை மானங் கெட்ட சிலர்..
கலாச்சார கலை கொண்டு
கனிவுடனே வாழ்ந்து வரும்
மானுடவியல் சிறப்பு தனை
அனாச்சாரம் செய்வதற்கும்
பெண்ணழகை மூடியிருக்கும்
பர்தாவும் பொட்டும் பிழையேது..
அங்கம் தெரியும் ஆடையது
அக்கினியாய் எரிகிற தீ
கணவன் ரசிக்கும் பெண்ணழகோ
காமக் கண்களுக்கு விருந்தாவதோ
பர்தாவை கலைவதனால்
பயன் ஏதோ சொல்லுமய்யா..
பர்தாவை கழற்ற பலரும்
மலை மேலே சிலை வைக்க சிலரும்
மனம் பதறுகிறது
மனிதாபிமானம் மண்டியிட்டு கிடக்கிறது
மாற்றமாென்றை தருவீரே
பெருமையற்ற என் தலைவா..
நான்கினமும் முக்குளிக்கும்
முத்தான இம்மண்ணில்
நான் மட்டுமே வாழனுமென
சுயநலமாக சொல்வதேனோ..
எம் தலைவா நீயும் சொல்லு...
நான் உரிமை கொடுத்து விட்டேன்
இலங்கை மண்ணின் சாசனத்தில்
இனியில்லை சிறு பான்மை
பார்க்கும் உரிமை யாருக்கேனும்
சிறப்பய் சொல்லி விடு
நல்லாட்சி நாயகனே....
இறைருள் ஜோதி இலங்கட்டும்
எம்கருச்சுமந்த எம் இலங்கை மண்ணில்
நல்லாட்சி மலரந்திடவே......
உணர்ச்சி பூக்களாய் தூவுகிறோம்
மரணித்த மானுடத்தின் கண்ணீர்
துளி கொண்டு எம் தலைவா
நீ உரிமை கொடு..
பார் முழுதும் பறக்கட்டும்
உன்- நல்லாட்சிக் கொடி
புகழாய்
முத்தாய் முக்கருச்சுமந்த எம்
மண்ணின் புகழ் கொண்டு
உரிமை - கொடு தலைவா
நல்லாட்சி நாயகனே....
உணர்ச்சிப் பூக்கள் ஆதில்..
