சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், இந்திய ரூபாய் மதிப்பில் உள்ள ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள மாற்றியமைத்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி மற்றும் மாத இறுதி நாளில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.21 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.79 காசுகளும் உயர்ந்துள்ளது. அந்தந்த மாநில வரிகளுக்கு ஏற்ப விலையில் மாறுபாடு இருக்கும். எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய்வள நாடுகள் முடிவு செய்துள்ளதை அடுத்து அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் ஓராண்டில் இல்லாத அளவு உயர்ந்து 58 டாலரைத் தொட்டுள்ளது. மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் சரிவுப்பாதையிலேயே உள்ளது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 26 காசாகவும், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 78 காசாகவும் உயர்த்த முடிவு செய்த எண்ணெய் நிறுவனங்கள், அந்த முடிவை ஒத்திவைத்த சில மணி நேரங்களில் தற்போதைய அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
