எம்.எம்.ஜபீர்-
தேசிய சமூக சேவை மாத்தின் இறுதிநாள் நிகழ்வு சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீம் தலைமையில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
2016 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள் கௌரவிப்பு, பொலிஸ் சவால் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி, நடமாடும் சேவை, மருத்துவ முகாம் என்பன இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ.கே.தம்பிக்க பியந்த, கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜெ.எஸ்.கருணாசிங்க, லயன்ஸ் கழகத்தின் மேலதிக ஆளுனர் சபையின் பொருளார் என்.வீ.ரஞ்சன், லயன்ஸ் கழகத்தின் மட்டக்களப்பு, அம்பாரை பிராந்திய தலைவர் எஸ்.ஸ்ரீரங்கன், நாவிதன்வெளி கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து, கல்முனை நகர லயன்ஸ் கழக தலைவர் ஏ.தச்சனாமூர்த்தி, கல்முனை நகர லயன்ஸ் கழக செயலாளர் கே. றிஸ்வி யஹ்சார், மாணவர் மீட்புப் பேரவையின் தலைவர் எஸ்.கணேஸ், அல்-அமானா சமூக சேவை அமைப்பின் ஸ்தாபக தலைவர் எம்.பீ.நபாஸ், லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், விளையாட்டு வீரர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
2016 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வு கல்முனை நகர லயன்ஸ் கழகமும், மாணவர் மீட்புப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்தமைகுறிப்பித்தக்கது.







