நாடெங்கிலும் உள்ள கிராம உத்தியோகத்தர்களை இணைத்து முகப்புத்தக நண்பர்கள் குழுமமாக செயற்படும் அகில இலங்கை கிராம உத்தியோகத்தர் சம்மேளனத்தின் (AIGNF) இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி தம்புள்ள சீகிரிய அலகொலவெவ கனிஷ்ட பாடசாலை மாணவ மாணவியர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாதணிகள் வழங்கும் நிகழ்வு கடந்த 2016-11-29 ஆம் திகதி குறித்த பாடசாலையில் இடம்பெற்றது.
இதன்போது அப்பாடசாலையிற்கு தேவையான இசைக்கருவிகள், பாடசாலை உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு தம்புள்ள பிரதேச செயலாளர் செல்வி H.P.A ஹேவாபதிரன அவர்களும் கல்விப் பணிப்பாளர்களான திருமதி ஹெட்டிஆரச்சி, திரு ஹேரத் அவர்களும், சுதந்திர கிராம உத்தியேகத்தர் சங்க தலைவர் சுசன்த முனவீர, ஜக்கிய கிராம உத்தியோக சங்க உப தலைவர் தயா பண்டார ரத்நாயக, ஸ்ரீலங்கா கிராம உத்தியோகத்தர் சங்க தேசிய அமைப்பளர் நெவில் விஜேரத்ன உட்பட அகில இலங்கை கிராம உத்தியோகத்தர் சம்மேளனத்தின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அகில இலங்கை கிராம உத்தியோகத்தர் சம்மேளனம் 2014-11-28 ஆம் திகதி கிராம உத்தியேகத்தர்களான தெல்தோட்டை சபீர் ஹசன் குளியாபிடிய தாரக சிரீபதி ஜயதிலக மாத்தளை அருன உபேந்திர பண்டார ருவன்வெல்ல சமீர கயான் எதிரிசிங்க மற்றும்ஹோமாகம இரேசா கன்கந்த ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஓர் முகப்புத்தக குழுவாகும். இக்குழுவில் தற்போது 1500 கிராம உத்தியோகத்தர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
சபீர் ஹஸன்.






