செல்வி. ஜெயலலிதா அவர்களின் இழப்பு பேரிழப்பாகும் - இ.தொ.கா தலைவர் முத்து சிவலிங்கம்

க.கிஷாந்தன்-

னக்கென குடும்பம் ஒன்றை அமைத்து கொள்ளாது செல்வியாக வாழ்ந்து 8 கோடி மக்களும் அம்மாவாக போற்றப்பட்ட தமிழ் நாட்டு முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களின் இழப்பு பேரிழப்பாகும்.

எந்த நாட்டிலும் எந்த மக்களுக்கும் அதிகமாக தமிழ் மக்களுக்கு ஏற்படும் துன்பங்கள் கடும் துயரங்கள் ஆகியவற்றிற்கு குரல் கொடுத்து வந்த அந்த உன்னத அம்மாவின் குரல் அடங்கி விட்டதே என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

திரைப்பட நடிகையாக கலை உலகில் அணைவரும் விரும்பதக்க ஒரு நடிகையாக இருந்து ஒரு நாட்டை ஆட்சி செய்யும் அளவுக்கு திறமைமிக்க தலைவியாக வாழ்ந்து காட்டிய செல்வி ஜெயலலிதா ஜெயராம் இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு அவர்களின் துன்பகரமான காலப்பகுதியில் குரல் கொடுத்து வந்தவர்.

இன்று அவ்வாறான ஒருவரை தமிழ் நாட்டு மக்களும் தமிழ் நாட்டோடு ஒட்டிப்பிறந்த இலங்கை மக்களும் ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளனர்.

இவரின் இழப்பு தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என தனது அனுதாப செய்தியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -