க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்



க.கிஷாந்தன்-

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 06.12.2016 இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கமைய நடைபெறவுள்ள இப்பரீட்சையில் சுமார் ஏழு லட்சம் பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். இதற்காக வேண்டி 65524 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள 5669 பரீட்சை நிலயங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது.

கையடக்கத் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரம் ஆகியவற்றை பரீட்சை மண்டபத்துக்குள் வைத்திருக்கும் பரீட்சார்த்தியின் பரீட்சை அனுமதி ரத்து செய்யப்படுவதுடன், ஐந்து வருடங்களுக்கு பரீட்சைத் தடையும் விதிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மலையகத்திலும் 06.12.2016 அன்று மலையக மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது. அந்தவகையில் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மாணவா்கள் ஆா்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது. அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -