இது குறித்து சினுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், “ஆப்கனில் காந்தஹார் மாகாணத்தில் சனிக்கிழமை காலை 5.30 மணியளவில் பெண் ஊழியர்கள் வாகனத்தில் அலுவகத்துக்கு சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களது வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் விமான பெண் ஊழியர்கள் ஐவரும் கொல்லப்பட்டனர். அப்பெண்கள் பயணித்த வாகனத்தின் ஒட்டுநரும் இதில் பலியானார். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தப் அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் தாலிபன்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என் சந்தேகிக்கப்படுகிறது.
ஆப்கனில் தாலிபன்கள் ஆட்சிக் காலத்தில் பெண்கள் கல்வி கற்கவும், பணிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.சாஜில்
