குளிர்பெட்டிக்குள் மீனுடன் இடியப்பம், ரொட்டிகள் வைத்திருந்தவருக்கு ரூ.5000 தண்டம் விதிப்பு..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை கோமரங்கடவெல பொது சுகாதார பரிசோதகர்களின் சுற்றிவளைப்பின் போது, ரொட்டவெவ பகுதியில் மாட்டிறைச்சியை குளிர்சாதன பெட்டிக்குள் லேபல் இன்றி வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக 6000/= ஆறாயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறு இன்று (21) திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாசினி சித்ரவேல் உத்தரவிட்டார்.

இவ்வாறு தண்டம் அறவிடப்பட்டவர் திருகோணமலை.ரொட்டவெவ பகுதியைச்சேர்ந்த மதார் சாஹிபூ அப்துல்சலாம் (65 வயது) எனவும் தெரியவருகின்றது.

இதேவேளை ஹோட்டலொன்றின் குளிர்பெட்டிக்குள் மீனுடன் இடியப்பம் மற்றும் ரொட்டிகள் வைத்திருந்த அதே இடத்தைச்சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரான எம்.எப்.நியாஸ் என்பவருக்கு 5000/= ரூபாய் தண்டம் செலுத்துமாறும் காலாவதியான குளிர்பானத்தை வைத்திருந்த மஹதிவுல்வெவ பகுதியைச்சேர்ந்த சிசிற குமார என்பவருக்கு 10000/= ரூபாய் செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன் மாசிக்குள் புளு காணப்பட்மை காலாவதியான பவுடரை விற்பளைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மஹதிவுல்வெவ பகுதியைச்சேர்ந்த எம்.விஜயரத்ன என்பவருக்கு 15000/= ரூபாய் தண்டம் செலுத்துமாறும் ரொட்டவெவ பகுதியில் சின்ன சீரகத்திற்குள் புளு காணப்பட்டமைக்காக 10000/= ரூபாய் தண்டம் செலுத்துமாறும் 

காலாவதியான சோயா மீட் மற்றும் வெட்டுத்தூள் பக்கெட்டுக்களை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக மஹதிவுல்வெவ சுஜீதா என்பவருக்கு 10000/= தண்டம் செலுத்துமாறும் பதில் நீதவான் சுபாசினி சித்ரவேல் உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -