கண்டி பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் முத்தமிழ் மன்றம் ஏற்பாடு செய்துள்ள தமிழ்த்தின விழா டிசம்பர் 3ஆம் திகதி முற்பகல் 9.00மணிக்கு கல்லூரி அதிபர் சிஹானா ரஹீம் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் நடைபெறும்
அரசாங்க தகவல் திணைக்கள முன்னாள் தகவல் அதிகாரியும் 'ஒளியரசி' சஞ்சிகையின் ஆசிரிய பீட ஆலோசகருமான கலாபூசணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் பிரதம அதிதியாக கலந்துக்கொள்வதுடன் மத்திய மாகாண கல்விப்பணிப்பளர் உட்பட அதிதிகள் பலரும் இந்த விழாவில் கலந்து கொள்வர்.
இவ்விழாவில் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுவதுடன் மாணவிகளிடையே நடத்தப்பட்ட தமிழ்தின போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவிகளுக்கு இவ்விழாவின் போது பரிசில்களும் வழங்கப்படுவதும் நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்படவிருப்பதாக மேற்படி கல்லூரியின் முத்தமிழ் மன்ற பொறுப்பாசிரியையான அரபா மன்சூர் தெரிவித்தார்.
என்.நஜ்முல் ஹுசைன்.
