"ஸ்வர்ண புறவற" விருது வழங்கல் - 2016 நாளை

கதிர் கான் -
"ஸ்வர்ண புறவற" விருது வழங்கல் நிகழ்வும், பரிசளிப்பு வைபவமும் நாளை 20 செவ்வாய்க்கிழமை இரண்டு மணிக்கு நெலும் பொகுண மஹிந்த ராஜபக்ச அரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. 

பல்வேறு துறைகளில் வினைத்திறனாக செயற்படும் நாடளாவிய ரீதியில் உள்ள 330 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கே இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன. 

உள்ளூராட்சி அதிகார சபைகளின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும், மக்களின் ஒத்துழைப்பின் ஊடாக மனித நேயத்துடன் கூடிய நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கான ஓர் ஏற்படாகவே இந்த ஒருங்கிணைந்த நிகழ்வு நடத்தப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்தார். மேலும் அமைச்சர் பயிஸர் முஸ்தபாவின் வழிகாட்டலில் இந்த வைபவம் இடம்பெறுவதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -