மட்டக்களப்பு பிக்கு உட்பட பல பிக்குகளுக்கு எதிராக மனோ கணேசன் களத்தி..!!

மட்டக்களப்பில் நேற்று முன்தினம் பௌத்த பிக்கு நடந்து கொண்ட விதம் தொடர்பாகவும் முஸ்லீம்களுக்கு எதிராக கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் சகோதர இனங்களுக்கு எதிராக குரோதமான பேச்சுக்களை பேசிய சிங்கள இளைஞரின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் சகல மத நல்லிணக்கம் சம்பந்தமாக செயல்படும் புத்தி ஜீவிகளுக்கு அமைச்சர் மனோ கணேசன் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

அத்துடன் இன ஜக்கியம் நல்லிணக்கம் சம்பந்தமாக தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சினை தந்தாலும் தான் இனியும் வாய் மூடி மெளனியாக இருக்க முடியாது என குறிப்பிடுள்ள அவர்,

ஏற்கனவே பொதுபலசேனா ஞானசார தேரர் கடந்த ஆட்சியில் சிறுபான்மையினர்களுக்காக எதிராக அவர் வெளியிட்ட கருத்துக்கள் சம்பந்தமாக நீதிமன்றத்தில் விசாரணை செய்து அவருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த நல்லாட்சியில் தொடர்ந்தும் சிறுபான்மையினர் மேலும் இவ்வாறு நிந்தனை செய்யப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என அமைச்சர் மனோ கணேசன் தனது திறந்த மடலை இவ்விடயம் சம்பந்தமாக செயல்படும் சிங்கள புத்திஜீவிகளுக்கு அனுப்பியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -