இறக்காமம் புத்தர் சிலை நிர்மாணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர்- அறிக்கை

றக்காமம் பிரதேசத்திலுள்ள மாணிக்கமடுவில் காணப்படும் மாயக்கல் மலையில் கடந்த மாதம் 29 ம் திகதி சனிக்கிழமை பலத்த பாதுகாப்பு ஏற்பாட்டுடன் வைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பாக என்னுடைய கருத்துக்களை தெரிவிக்க விரும்புகின்றேன்.

குறித்த சிலை வைப்பானது எனது ஒப்புதலுடனேயே நடந்தேறியதாகவும், இந்தச் சிலையை எந்த ராசாவாலும் அகற்ற முடியாது எனவும் நான் கூறியதாக, கடந்த இரவு தொலைகாட்சி நிகழ்ச்சியான வெளிச்சம் நிகழ்ச்சியில் தோன்றிய சகோதரர் அதாவுல்லாஹ் ஒரு புரளி ஒன்றைக் கிளப்பியுள்ளார்.

இவரது விஷமத்தனமான பொய்ப்பிரச்சாரத்தை தழுவியதாக பல்வேறு சமூக வலைத்தளங்கள் தங்களது ஆட்சேபணைகளையும் அதிருப்திகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

சகோதரர் அதாவுல்லாஹ்வின் இந்தச் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்பதுடன் இது அப்பட்டமான பொய்யான கட்டுக்கதையுமாகும்.

சிலை வைக்கப்பட்ட குறித்த தினத்தன்று குறித்த சம்பவம் நடைபெறப் போவதை அறிந்த நான் உடனடியாக அரசாங்க அதிபரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தச் சிலை வாய்ப்பானது நடக்கக் கூடாது என்றும் தமிழ் முஸ்லீம் மக்கள் வாழும் இப்பகுதியில் இந்தச் சிலைவைப்பானது பாரதூரமான விளைவுகளை எற்படுத்தும் எனவும்,

இனங்களுக்கு இடையில் பாரிய மனக்கசப்புக்களை ஏற்படுத்தும் எனவும் விளக்கி மேற்படி நிகழ்வு நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்திருந்தேன்.

அரசாங்க அதிபர் ஆம் என எனது நியாயங்களை ஏற்றுக்கொண்ட போதும் குறித்த நிகழ்வானது ஒரு சில மணித்தியாலங்களில் நடந்தேறியதையிட்டு அதிர்ச்சியடைந்த நான் என்னுடைய அதிருப்தியினையும் விஷனத்தையும் அரச அதிபருக்குத் தெரிவித்து இருந்தேன்.

குறிப்பிட்ட விடயம் தொடர்பாக எமது ஆட்சேபனையை எதிர்வரும் 7 ம் திகதி நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்க உள்ளேன் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இவ்வபாண்டமான செய்தி வெளியீடானது மக்களால் நிராகரிக்கப்பட்டு அரசியல் அனாதையாகியுள்ள அதாவுல்லாஹ் அவர்களின் அரசியல் வங்குரோத்துத்தனத்தையே காட்டுகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -