சணச சர்வதேச சிக்கன தின விழா நிகழ்வுகள்

 











ஏ.எல்.ஏ.றபிக் பிர்தௌஸ் -


லங்கை சணச சம்மேளனமும், கல்முனை மாவட்ட சணச சமாசமும் இணைந்து 'சணச அங்கத்தவர்அனைவரையும் இலட்சாதிபதியாக்குவோம்' எனும் தொனிப் பொருளில் நடாத்திய சர்வதேச சிக்கன தின விழாநிகழ்வுகள் நேற்று சாய்ந்தமருது லீ மிறிடியன் ஹோட்டலில் இடம்பெற்றது.

இலங்கை சணச சம்மேளனத் தலைவர் விஸ்வபிரசாதினி டொக்டர் பி.ஏ.கிரிவந்தெனிய தலைமையில் இடம்பெற்றஇவ்விழாவில் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி. ஆரீப் சம்சுதீன், கே.எம்.ஏ.றசாக், கிழக்கு மாகாணகூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் வீ.திவாகர சர்மா, கல்முனை மாவட்ட சணச சமாசத் தலைவர்எம்.ஐ.எம்.மன்சூர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இவ்விழாவில் நாட்டின் அனைத்து மாகாணங்களிலுமுள்ள சணச சம்மேளனத்தின் ஆயிரக் கணக்கானமுக்கிய உறுப்பினர்களும், மூவின மக்களும் கலந்து கொண்டு, சிறப்பித்தமை ஒரு விசேட அம்சமாகக்காணப்பட்டது என எமது பிராந்திய செய்தியாளர் ஏ.எல்.ஏ.றபிக் பிர்தௌஸ் தெரிவிக்கிறார்.

மூவின மக்களின் கலை, கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கக் கூடிய கலை நிகழ்வுகள் பலவும்மேடையேற்றப்பட்டதோடு, கடந்த காலங்களில் சணச சம்மேளன வளர்ச்சிக்காகப் பாடுபட்டுழைத்தவர்களுக்குப் பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னங்கள் வழங்கி, கௌரவிக்கப்பட்டது.

இதேவேளை அதிதிகளும், சனச தொண்டர்களால் பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னங்கள் வழங்கி, கௌரவிக்கப்பட்டனர்.

சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'மக்களின் பணத்தை மூலதனமாகக்கொண்டு செயற்பட்டு, அம்மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்டஎத்தனையோ அமைப்புக்களுள் இன்று சனச நிறுவனம் முன்மாதிரியாகத் திகழ்கிறது என்றால் அது மிகையாகாது. எனவே காரணமானவர்களைப் பாராட்ட வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -