அபு அலா -
இந்தியாவில் 2 வாரங்கள் நடைபெற்ற ஆயுர்வேத ஹிஜாமா வைத்திய வெளிக்கள பயிற்சி நெறியை முடிப்பதற்காக இலங்கையிலிருந்து சென்ற ஆயுர்வேத வைத்திய குழுவினர் நேற்றய தினம் நாடு திரும்பியுள்ளதாக அட்டாளைச்சேனை தள ஆயர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையத்தின் பதில் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் இன்று (03) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இருவார ஆயுர்வேத ஹிஜாமா வைத்திய வெளிக்கள பயிற்சி நெறியை கற்றுக்கொள்வதற்காக இந்தியாவிலுள்ள ஹயித்தரபாத், சென்னை, வேங்களுர் போன்ற இடங்களில் அமைந்துள்ள யூனானி மருத்துவக் கல்லூரி மற்றும் யூனானி ஆராய்ச்சி நிலையங்களில் நிறைவு செய்துவிட்டு நேற்றய தினம் நாடு திரும்பியுள்ளதாகவும் கூறினார்.
இலங்கையிலிருந்து சென்ற வைத்திய குழுவின் தலைவர் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் அவர்களினால் இப்பயிற்சியை நடாத்தி வைத்த இந்தியாவைச் சேர்ந்த வைத்திய நிபுணர்களை பாராட்டி ஞாபகச் சின்னங்களையும் வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.