இந்த நாட்டின் அரசியல் சாசனம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை - திருகோணமலையில் சம்மந்தன்

அப்துல்சலாம் யாசீம்-
ந்த நாட்டின் அரசியல் சாசனம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதுடன் அதை நிறைவேற்ற வேண்டியதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டு முற்பகுதியிலாவது அது நிறைவேற்றப்படக்கூடிய நிலைமை உள்ளது என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் விஷேட கூட்டம் எதிர்கட்சி தலைவர் இரா .சம்பந்தன் தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று (28) மாலை நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்..

நாட்டின் பெரும்பான்மையினத் தலைவர்கள் மத்தியிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது. இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட முடியாது எனவும் தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபோது நாம் எதிர்பார்க்காத அரசியல் மாற்றம் இந்த நாட்டில் ஏற்பட்டது. அது எங்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய மாற்றமாகும்' என்றார். 'ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இந்த நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலும் நாம் ஒரு வருடகாலமாக பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவதைத் தவிர்த்தார்கள். நாங்கள் கோரிக்கைகளை வைத்தபோதும் அவர்கள் எந்த விடயத்தையும் முன்வைக்கவும் இல்லை. பதில் தரவும் இல்லை. 

இந்த அரசாங்கம் வந்த பின்னர் நாடாளுமன்றத்தை ஓர் அரசியல் சாசன சபையாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் ஒரு நடவடிக்கைக்குழு அமைக்கப்பட்டு பல உப குழுக்கள் அமைக்கப்பட்டன.  பல முக்கிய விடயங்கள் உப குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டு அந்த உப குழுக்கள்; பல விடயங்களையும் ஆராய்ந்தது. மனித உரிமை நிதி நீதி பொதுச்சேவை மத்திக்கும் பிராந்தியத்துக்கும் உள்ள தொடர்புகள் சட்டம் ஒழுங்கு அவசரகாலச்சட்ட ஒழுங்கு எனப் பல விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. 

அந்தக் குழுக்கள் அறிக்கைகளை நடவடிக்கைக் குழுவுக்குச் சமர்ப்பித்து அந்த அறிக்கைகளை பிரதமர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். நடவடிக்கைக்குழு இதுவரையில் 45 தடவைகள் கூடியுள்ளதுடன் பல விடயங்கள் தொடர்பிலும் பேசியுள்ளனர். தமிழரசு கட்சியின் அதியுயர் பீடம் நாட்டின் ஜனாதிபதியை சந்தித்த போது அவர்கள் உரையாடிய அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் மற்றும் தீர்வுகள் பற்றிய விடயங்களை பிரதேச தமிழரசு கட்சியாளர்களுக்கு தௌிவு படுத்தும' முகமாகவே இக்கூட'டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பாராள மன்ற உறுப்பினர் கே.துறைரட்ணசிங்கம்- கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி-முன்னாள் நகர சபை உறுப்பினர் கே.செல்வராஜா ஆகியோருடன் கிராம மட்ட முக்கியஸசதர்களும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -