திருகோணமலை சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு எச்.ஐ.வி/எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வை வழங்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலையின் எயிட்ஸ் பிரிவு வைத்திய அதிகாரியை நாடி இரண்டு நாட்களுக்கு எயிட்ஸ் பற்றிய தெளிவுகளை கைதிகளுக்கு வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன் நடாத்தி அதன் அறிக்கையை அனுப்பி வைக்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
திருகோணமலை சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகள் மற்றும் விளக்கமறியல் கைதிகள் எச்.ஐ.வின் தாக்கம் மற்றும் அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் குறித்து அறிய வேண்டும் எனும் நோக்கிலேயே இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அத்திணைக்களம் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவ்வாறு நடத்தப்பட்டதும் விசேடமாகும்.