ஒல்லிக்குளம் மேற்கு பகுதிக்கு மின் இணைப்பினை பெற்றுக்கொடுத்தார் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்.!

எம்.ரீ. ஹைதர் அலி-
மாகாண சுகாதார, சுதேச மருத்துவம்,சமூக சேவைகள், சிறுவர் நன்நடத்தை மற்றும் கிராமிய மின் வழங்கள் அமைச்சர் கௌரவ A.L.M. நஸீர் அவர்களிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் விடுத்த வேண்டுகோளிற்கமைவாக கிழக்கு மாகாண சபையினுடைய வருடாந்த அமுலாக்கல் செயர்த்திட்டத்தினூடாக (PSDG) கிராமிய மின் வழங்கள் திட்டத்தின் கீழ் ஒல்லிக்குளம் மேற்கு பகுதிக்கான மின் இணைப்புகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

சென்ற ஆண்டு மாகாண சபை நிதி ஒதிக்கீட்டின் மூலம் இவ்வேளைத்திட்டத்திற்கான அரைப்பகுதி வேலைகளை மேற்கொள்ளப்பட்டது. அத்தோடு, தற்போது இத்திட்டத்திற்கென மேலும் இரண்டு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பகுத்திக்கான மின் இணைப்புகளை முற்றுமுழுதாக பூரணப்படுத்தி வழங்கும் நடவடிக்கைகள் 
11.10.2016ஆந்திகதி செவ்வாய்கிழமை முதல் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வேலைகள் நடைபெறும் பகுதிக்கு மின் அத்தியேட்சகர் நெளபல் அவர்களுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் அன்றைய தினம் நேரில் விஜயமொன்றினை மேற்கொண்டு அங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் மின் கம்பிகளை இணைக்கும் பணிகளை பார்வையிட்டார். 

மேலும், இன்றுடன் இவ்வேலைகள் அனைத்தும் முற்றுமுழுதாக பூரனப்படுத்தப்படவுள்ளது. ஆகவே இதன் மூலம் இதுவரை காலமும் மின் இணைப்புகளை பெற்றுக்கொள்ளாத அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கான மின் இணைப்புகளை குறைந்த கட்டணத்தில் இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்பம் மாகாண சபை உறுப்பினரினால் ஏற்படுத்திக் கொடுக்கப்படுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -