க.கிஷாந்தன்-
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிளாரன்டன் தோட்ட பகுதியில் டிப்பர் ரக வாகனமொன்று 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நானுஓயா கெல்சிமா எலிய பகுதியிலுள்ள மரக்கறி தோட்டமொன்றுக்கு வேலைக்குச் சென்றுவிட்டு, மீண்டும் நுவரெலியாவுக்கு திரும்பி சென்ற வேளையிலேயே இவ்விபத்து 12.10.2016 அன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த டிப்பர் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகவும் படுகாயமடைந்த ஏழு பேரும் கவலைக்கிடமான நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


