தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை உடனடியாக தீர்வு காணவும் - நாடாளுமன்றில் ஹிஸ்புல்லாஹ்

லையகத்தில் வாழ்கின்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரி மலையகத்தின் பல பாகங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அவர்களது சம்பளப் பிரச்சினை காலம் கடத்தாது தீர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நீதிமன்ற குற்றவியல் திருத்தச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கூறியதாவது:-

நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்களிப்பு செய்கின்ற மலையக தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். அம்மக்களது பிரச்சினையை சிலர் அரசியல் நோக்குடனே பார்;க்கின்றனர். 
இந்நிலையில், தமது நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி 9 நாட்களுக்கு மேலாக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கூட்டு ஒப்பந்தப் பேச்சு மூலம் தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும் அதுவும் காலம் கடத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் மலையக மக்களது பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதனுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஆகியோர் கவனம் செலுத்தி உடனடியாக தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். 

மலையக மக்களது நியாயமான கோரிக்கைகள் அடங்கிய இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நாங்கள் எமது பூரண ஆதரவினை வழங்குகின்றோம். அம்மக்களுக்கு சம்பளப் பிரச்சினை தொடர்பில் நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாங்கள் முன்னின்று செயற்படுவோம் - என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -