விங்ஸ் விழா - 2016 :கிளிநொச்சி, அம்பாறை, கொழும்பில்

அஷ்ரப் ஏ.சமத்-
விங்ஸ் விழா 2016 (நம்பிக்கையில் சிறகசைப்பு) மூவினங்களையும் சாா்ந்த 900 இளைஞா்களை ஒன்று திரட்டி கிளிநொச்சி, அம்பாறை, கொழும்பில் கலைவிழா..

ஒரு பன்முகம் கொண்ட பங்கேற்கும் தன்மையுடைய செயன்முறையாக நல்லிணக்கத்தை பிம்படுத்துவதற்கு பங்களிப்பதற்கு அனைத்துப் பின்னணிகளிலும் இருந்தான பிரஜைகளை ஒன்றிணைத்துக் கொண்டு வரும் கலை. சிந்தனை மற்றும் உணவு சாா்ந்த ஒரு கொண்டாட்டமே விங்ஸ் விழாவாகும். இவ் விழா ஓக்டோபா் 21,22,23 கிளிநொச்சி, ஒக்டோபா் 27,28,29 அம்பாறை காரைதீவு, நவம்பர் 7,8.9.10.11.12.13 ஆம் திகதிகளில் இவ் இளைஞா்கள் ஒன்று கூடி தமது கலை கலாச்சாரம், குறுந்திரைப்படம், தத்தமது உணர்வுகள் போன்றவற்றை வெளிப்படுத்துவாா்கள். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தலைமையில் கீழும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆலோசகராகக் கொண்டு இயங்கும் தேசிய ஒற்றுமை, மற்றும் நல்லிணக்கத்துக்கான அமைச்சும் பல்வேறு சர்வதேச தொண்டா் நிறுவனங்களும் இணைந்து இத்திட்டத்திட்டதினை செயற்படுத்துகின்றன. இதில் ஜரோப்பிய யுனியன், இலங்கை கெயாா் நிறுவனம், ஜேர்மன் அபிவிருத்தி கூட்டுத்தபாணம்,, போன்ற இளைஞா் உருவாக்கம், இலங்கையின் கலைக்கழகம், ஆகியன இணைந்தே இத்திட்டத்தினை செயல்படுத்துகின்றது. 

இவ் விடயம் சம்பந்தமாக இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் விங்ஸ் என்ற அமைப்பின் ஊடகமாநாடு இன்று (5) காலிமுக ஹோட்டலில் நடைபெற்றது. இவ் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கெயா் நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளா் அகமட் றிஸ்லான், இலங்கை கலைச் சங்கத்தின் தலைவி - சந்திரு தேனுவான, மாறிமுத்து, கலாநிதி ஜயசிங்க, ஜீவனி காரியவாசம். மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சின் அதிகாரிகளும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனா்.

கலை நிகழ்ச்சியானது கலைத்துவச் செயன்முறைகள் மற்றும் உருவாக்கங்கள், மூலமாக நல்லிணக்க எண்ணக்கருவை அணுகும் வகையில் நாடு முழுவதிலிருந்தும் கலைஞா்கள் செயன்முறையாளா்கள் எழுத்தாளா்கள், மற்றும் குழுக்களினால் வடிவமைக்கப்பட்ட ஆடல் நாடகம், நிகழ்வுகள், அரங்கம், கண்காட்சிகள் கட்புலக் கலைகள், குறும் படங்கள், மற்றும் இலக்கியங்களைக் கொண்டிருக்கும். நிகழ்ச்சியில் காணப்படும் கலைப்படைப்பு சமுகங்களை ஒன்றுபடுத்தி கொண்டுவருவதற்கு முயலுகின்ற ஒரு பல்வகையான அணுகுமுறைகள் மற்றும் நடைமுறைகளைக் கூறுகின்றது. அத்துடன் மூன்று நாள் மாநாடு, திறந்த வெளி உணவுச் சந்தை, என்பன அமைகின்றது. 

வடக்கு கிழக்கு வாழ் இளைஞா்கள் யுத்தம் முடிவடைந்து பல வருடங்களைக் கடந்தும் இன்றும் அவா்கள் உள்ளங்களில் தமது துயர்படைத்த இழப்புக்களின் அனுபவித்த துண்பங்களைச் சூழ்ந்த கடினமான கலந்துடையாடல்கள் அவா்களது உண்மைகளை ஏற்றுக் கொள்ளுதல் ஆகும்.

இதன் பின்ணனயில் நல்லிணக்கம், மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் ஆகிய பரப்புகளில் கலைஞா்களி்ன் படைப்புக்கள், ஒரு முக்கியமான கவனத்திற்குரியவையாகவும் மற்றும் ஓர் அறிவாா்ந்த ரீதியான ஆராய்ச்சிக்குரியதொரு படைப்புக்கள் ஒரு முக்கிய கவணத்திற்குரியவையாககும் மற்றும் ஓர் அறிவாா்ந்த ரீதியான ஆரயாச்சிக்குரியதொரு பகுதியாகவும் தோன்றியுள்ளன. 

கிளிநொச்சி விழா - கிளிநொச்சி மத்திய கல்லுாாி ஒக்டோபா் 21,22.23 மற்றும் கிளிநொச்சி கூட்டுரவு மண்டபத்திலும் - அம்பாறை விழா - ஒக்டோபா் 27-29 கிழக்கு பல்கலைக்கழகத்தின் விபுலாநாந்த அழகியற் கற்கைகளுக்கான நிலையத்தின் பங்களிப்புடன் இடம் பெறும்.  கொழும்பில் நவம்பா் 7,8 மற்றும் 9 பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம், உணவு சந்தை நவமபா் 11-13 கொழும்பு கீறீன்பாத் திறந்த வெளியரங்கில் நடைபெறும் இங்கு முவினங்களது உணவு வகைகள் பரிமாறப்படும் அதன் செயன்முறைகளும் நடைபெறும்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -