பிள்ளைகளின் கல்வித் துறைக்கு பெற்றோர்கள் துணை நிற்கவேண்டும்


அபு அலா –

பிள்ளைகளின் விருப்பத்துக்கு ஏற்றாப்போல் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கல்வித் துறைக்கு பெற்றோர்களாகிய நாம் துணையாக இரிக்க வேண்டும். இவ்வாறு இரிப்போமானால் அவர்களின் எதிர்கால வாழ்வு சிறந்ததொரு வாழ்வாக அமையும் என்று மக்கள் வங்கி அக்கரைப்பற்று கிளையின் வியாபார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.நபீல் தெரிவித்தார்.

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (20) அக்கரைப்பற்று மக்கள் வங்கிக் கிளையில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை என்பது பெற்றோர்களுக்காகிய பரீட்சையாகத்தான் இது கருதப்படுகின்றதே தவிற மாணவர்களுக்கல்ல. இந்த பரீட்சையில் சித்திபெற்று விட்டோம் என்றென்னி மற்றய பரீட்சையில் தவறை விட்டுவிட வேண்டாம். மற்றய பரீட்சைகள் தான் எமது எதிர்கால வாழ்க்கையை நிர்னயிக்கின்றது.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை ஒவ்வொரு வருடமும் பாராட்டியும் பரிசில்களை வழங்கியும் வருகின்றோம். இதனால் அம்மாணவர்கள் அவர்களின் கல்வி நடவடிக்கையில் அதித அக்கரை கொண்டவர்களாக காணப்படுவார்கள். இவ்வாறான செயற்பாடுகள் அம்மாணவர்களிடம் வரவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே அக்கரைப்பற்று மக்கள் வங்கி இதனை செய்து வருகின்றது.

சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்தி பெற்ற மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைய தவறி விடுகின்றனர். இவ்வாறு சித்தியடையத்தவறுவது ஏனென்றால் அவர்கள் நினைக்கின்றனர் தாங்கள் சாதாரண தரத்தில் 9 ஏ சித்தியை பெற்றுவிட்டோம் உயர்தர பரீட்சையில் எப்படியும் சித்தியடையலாம் என்றென்னி சில மாணவர்கள் செயற்படுகின்றனர்.

சில மாணவர்களுக்கு தங்களின் பெற்றோர்களினால் கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக தங்களின் விருப்பத்துக்கு மாறான துறையினை பெற்றோர்களுக்காக தெரிவு செய்வதனால் அம்மாணவர்களும் உயர்தர பரீட்சையில் சித்தியடைய தவறி விடுகின்றனர்.

இவ்வாறு 9 ஏ சித்தி பெற்ற மாணவர்களே மிக அதிகமாக உயர்தரப் பரீட்சையில் சித்தியடையத் தவறி விடுகின்றனர். இதை நான் அறிந்த வகையில் சொல்கின்றேன். இவ்வாறான நிலைமையிலிருந்து பெற்றோர்களும், பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு அதற்கமைவாக நடந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் எமது பிள்ளைச் செல்வங்களின் எதிர்கால வாழ்வு ஒரு சிறந்ததொரு வாழ்வாக அமைவதில் எவ்வித ஐய்யப்பாடுகளுக்கு இடமே இல்லை என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -