காரைதீவு நிருபர் சகா-
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலத்தில் ஆசிரியர் தின நிகழ்வு நேற்று இடம் பெற்றது. இந்நிகழ்வு பாடசாலை அவிபிருத்திக்குழுசெயலாளர் பா.மாலினி தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் திருசெல்வம் ஐயா தலைமை உரையாற்றுகையில் எமது சேவைக்கு முக்கியமாக ஒழுக்கமும் பணிவும் கடமையும் சரி வர இருந்தால் நாம் வெற்றிகளையும் வாழ்த்துக்களையும் பெறலாம் எனவும் கூறினார் ஜேர்மன்நம்பிக்கை ஒளி அம்மைப்பின் (கி.மா) பணிப்பாளர் ஜெயசிறில் உரையாற்றுகையில் ஆசிரியர் சேவை என்பது மிகவும் புனிதமானது இந்த சேவையினால் வளரும் சமுதாயத்தை சிறந்த முறையில் வளப்படுத்துவது ஆசிரியர்களின் பொறுப்பும் தார்மிக கடமையும் ஆகும் எனவும் ஆசிரியர்களுக்கு நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார் அத்தோடு நம்பிக்கை ஒளி அமைப்பினால் ஆசிரியர்களுக்கு பரிசுப்பொதியும் வழங்கப்பட்டது.
மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து கௌரவித்து பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.