நிவாரண அமைப்பின் ஏற்பாட்டில் இந்நாட்களில் நிலவும் கடுமையான வரட்சி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ, வெல்லம்பிட்டிய ஆகிய மக்களுக்கு நிவாரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு தெமட்டைகொடை மல்லிகாராம ஜும்ஆப் பள்ளிவாசலில் சவூதி அரேபியா இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி அஸ்ஸெய்க் இம்ரான் ஜமால்தீன் தலைமையில் 10-10-2016 ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சவூதி அரேபியாவிலிருந்து வருகை தந்துள்ள சவூதி அரேபியா இஸ்லாமிய நிவாரண அமைப்பின் பிரதிநிதிகளான கலாநிதி முஹமட் பா ஜுனைட், அஹமட் அஹிஜா அலி மற்றும் அஸ்ஸெய்க் உவைஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் அத்திவசியமான உணவுப் பொருட்களான அரசி, பால மா, பருப்பு. நுளம்பு வலை உள்ளிட்ட தலா 5000 ருபா பெறுமதியான உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிவாரணப் பொருட்கள் மொத்தமாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்து 3000 பேருக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது. கடுமையான வெள்ளப் பாதிப்புக்குள்ளான மல்வானை, மாபோல. கன்னத்தோட்டைப் பகுதிகளிலும் 11-12 ஆகிய திகதிகளில் வழங்கப்படவுள்ளது.
இக்பால் அலி



