மாவடிச்சேனை இக்பால் வித்தியாலயத்தின் தேவைப்பாடுகளை கேட்றிந்துகொண்ட ஷிப்லி பாறுக்..!

எம்.ரீ.ஹைதர் அலி-
ட்டு மாவட்டத்தின், மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின், கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மட்/மம/மாவடிச்சேனை இக்பால் வித்தியாலயத்திற்கு அதிபரின் அழைப்பின்பேரில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் 2016.10.18ஆந்திகதி செவ்வாயக்கிழமை விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின்போது பாடசாலையின் அதிபர் மீராமுகைதீன் அவர்களினால் பாடசாலையின் தேவைப்பாடுகள் தாடர்பாக மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்கிடம் தெரியப்படுத்தினார்.

இப்பாடசாலையானது 1990ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தரம் 1-5 வரையான வகுப்புக்களை கொண்டுள்ளதோடு, 286 மாணவர்கள் கல்வி கற்றும் வருவதாகவும், ஆரம்பப்பிரிவுக்கான ஆசிரியர் ஆளணிகள் மற்றும் கட்டட தேவைப்பாடுகளும் காணப்படுவதாகவும் பாடசாலையின் அதிபர் தெரிவித்தார். மேலும் இப்பாடசாலை போக்குவரத்து கூடுதலாகவுள்ள மாவடிச்சேனை - கொழும்பு பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ளதால் இம்மாணவர்களின் கல்வியினை கருத்திற்கொண்டு இப்பாடசாலையினை 6 - 9 ஆம் தரம் வரை தரமுயர்த்தி தருமாறும் பாடசாலையின் அதிபர் கேட்டுக்கொண்டார்.

இதனை கருத்திற்கொண்டு, கட்டட குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதற்கும், முற்றுமுழுதாக நிறைவடையாமல் காணப்படும் வாசிகசாலை கட்டடத்தினை பூர்த்திசெய்வதற்கும் முதலமைச்சருடன் இது விடயமாக தெரியப்படுத்தி அதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும், இப்பாடசாலையில் காணப்படும் வாசிகசாலையின் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு தேவைப்பாடாகவுள்ள நூல்களின் விபரங்களை தனக்கு வழங்குமாறும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பெற்றுத்தருவதாகவும் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

இவ்விஜயத்தின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களுடன், மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாக சபை தலைவரும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கே.பீ.எஸ். ஹமீட், மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ரீ. ஹைதர் அலி, பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர் ஏ.எம். அஸ்மி மற்றும் அதிபர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து இப்பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் என். சஹாப்தீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -