கிழக்கில் தொழில்பேட்டைகள் அமைக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் நடவடிக்கை..!

ஹாசிப் யாஸீன்-
க்கிய அறபு இராச்சியத்தின் அஜ்மான் நாட்டின் சுதந்திர வர்த்தக முதலீட்டு சபையின்தலைவர் மஹ்மூத் அல்-காசீம் தலைமையிலான குழுவினருக்கும் விளையாட்டுத்துறைபிரதி அமைச்சர் ஹரீஸூக்குமிடையிலான சந்திப்பு இன்று (24) திங்கட்கிழமைவிளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, இலங்கையில் வர்த்தக முதலீட்டு வலயங்களை உருவாக்குதல்சம்பந்தமாக ஆராயப்பட்டது. மேலும் நாட்டின் துறைமுகங்களை அண்டிய பிரதேசங்களில்தொழில்பேட்டைகளை அமைப்பது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் குறித்தஇடங்களை நேரடியாக சென்று பார்வையிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ், 

யுத்தத்திற்கு பின்னர் கிழக்கு பிராந்தியத்தில் மக்களிடைய சகஜநிலை தோன்றியுள்ளது.அங்குள்ள இளைஞர், யுவதிகள் தங்களது கல்வித் தகைமைக்கேற்ற தொழில்களைபெறுவதில் சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

மேலும் அறபு நாடுகளில் நிலவுகின்ற யுத்த சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடிகள்காரணமாக இலங்கையர்கள் குறிப்பாக கிழக்கை சேர்ந்தவாகள்; தங்களது தொழில்களைஇழக்கும் சூழ்நிலையும் எதிர்காலத்தில ஏற்படலாம். இதனை கவனத்தில் எடுத்து கிழக்கிலும்தொழில்பேட்டைகளை அமைக்குமாறு தூதுக்குழுவினரிடம் பிரதி அமைச்சர் கோரிக்கைவிடுத்தார்.

இச்சந்திப்பில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.அப்துல்ஹையும் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -