ரிஜாஸ் அஹமட்-
'இருள் நீக்கி தேசத்துக்கு வெளிச்சம்' எனும் தொனிப்பொருளின் கீழ் மின்சக்தி அமைச்சர் ரன்ஜித் சியம்பலாப்பிட்டிய அவர்களின் சிந்தனையின் கீழ் நடமாடும் சேவை இன்று அம்பாறை தொழிற்பயிற்சி அதிகார சபைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ மின்சக்தி அமைச்சர் ரன்ஜித் சியம்பலாப்பிட்டிய அவர்களும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே அவர்களும் பெற்றோலிய துறைப் பிரதி அமைச்சர் அனோம கமகே அவர்களும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜெயவிக்கிரம அவர்களும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் உதுமாலெப்பை அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாரத்ன அவர்களும் மின்சக்தி அமைச்சின் செயலாளர் னுச.டீஆளு.பதகொட அவர்களும் மின்சார சபையின் பொறியியலாளர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளென பலரும் கலந்து கொண்டனர்.