எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் இன்று பல்வேறு அபிவிருத்திகளுட கல்குடா பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
கல்குடாவில் அரசியல்,கல்வி,கலாச்சாரம் உள்ளிட்ட பல துறைகளிலும் ஈடுபட்டு கல்குடா பிரதேச மக்களின் நல மேம்பாட்டுக்காக உழைத்துக்கொண்டிருக்கும் "கல்வி மற்றும் சமாதானத்துக்கான அமைப்பு" காலை ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாஜ் அல்ஹாபிழ் நசீர்அஹமட் அவர்கள் வாழைச்சேனை YMCA பாலர் பாடசாலை கட்டிடத்தில் இச்சந்திப்பு இடம் பெற்றது.
இந்நிகழ்வில் ஏராளமான கல்குடா வாழைச்சேனை பிரதேச முஸ்லிம் , தமிழ் மக்கள் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
அடுத்த கட்டமாக காவத்தமுனை அல் அமான் வித்தியாலயத்தில் காவத்தமுனை பிரதேச மாதர் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரதேச பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துமுகமாக இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாஜ் அல்ஹாபிழ் நசீர்அஹமட் அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது வறுமைக்கோட்டின் கீழ்வாழும் நூற்றுக்கணக்கான பெண்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பிரயோசனம் அடைந்தனர்.
அடுத்த கட்டமாக தியாவட்டவான் கிராம மக்களுடனான முதலமைச்சரின் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் கௌரவ முதலமைச்சருடன், கல்குடா பிரதேச அரசியல் பிரமுகர்கள் பலரும் அவருடன் கலந்து கொண்டிருந்தனர். பிரதேச மக்கள் முதல்வரிடம் தங்களது தேவைகளை,குறைபாடுகள் முன் வைத்தார்கள்.
அடுத்த கட்டமாக கேணிநகர்(கேணிமடு/நாவலடி) பகுதி மக்களுடனான கௌரவ முதலமைச்சரின் சந்திப்பு கேணிநகர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது ஏராளமான பிரதேச மக்கள் கலந்துகொண்டு தங்களது தேவைகள் முன் வைத்தார்கள். இன்றைய கல்குடா பிரதேச விஜயத்தின் அடுத்தகட்டமாக, ஓட்டமாவடி ஹுதா பள்ளிவாயலில் ழுஹர் தொழுகையைத் தொடர்ந்து, அந்தப் பள்ளிவாயலின் புனர்நிர்மாணம் சம்பந்தமான கலந்துரையாடல் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.
அடுத்தகட்டமாக ஓட்டமாவடி பிரதேசசபையில் மக்கள் சந்திப்பொன்று ஏற்பாடுசெய்யப்பட்டு நடைபெற்றது இந்நிகழ்வு அனைத்திலும் முதலமைச்சர் அவர்களுடன் கெளரவ சிப்லி பாரூக் கிழக்கு மாகாண சபை உருப்பினர்,ஓட்டமாவடி பிரதேச சபை முன்னால் தவிசாளர் KBS.ஹமீட் அவர்களும் இன்னும் பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அத்தோடு பிறைந்துரைச்சேனை, வாழைச்சேனை பிரதேசங்களிலும் பல்வேறு சந்திப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.