பொலிஸார் சேறு பூசிக் கொண்டனர் - ஜனாதிபதி

ரசாங்கத்திற்கு சொந்தமான குண்டு துளைக்காத வாகனங்கள் இரண்டினை மறைத்து வைத்துள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் தோட்டத்தை சுற்றிவளைத்து சோதனையிட்டமை முறையற்ற செயல் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சிறுபிள்ளைதனமான செயல்களினால் முழு அரசாங்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். யார் என்ன கூறினாலும் இது ஒரு சிறுபிள்ளைதனமான செயல் என ஜனாதிபதி பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக யாராவது தகவல் வழங்கினால் இவ்வாறான குழந்தைத்தனமான செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் அவற்றினை கண்டுபிடிப்பதற்கு தேவையான தொழில்நுட்பங்கள் உள்ளன. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தில் இதற்கான உபகரணங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாட்டினை குற்றப்புலனாய்வு பிரிவு மேற்கொண்டதா? அல்லது நிதி மோசடி விசாரணை பிரிவு மேற்கொண்டதா? என்பது குறித்து தனக்கு தெரியாதென்ற போதிலும் இதனால் பொலிஸார் சேறு பூசிக் கொண்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இறுதியில் இவ்வாறான செயற்பாடுகள் மக்களின் நகைப்புகுரியதாக மாறிவிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -